ஊற்றும் தேவா ஊற்றும்

 

 

ஊற்றும் தேவா ஊற்றும் உம் வல்லமையை ஊற்றும்

நிரப்பும் தேவா நிரப்பும்; உம் அபிஷேகத்தால் நிரப்பும்

 

ஊற்றும் தேவா  நிரப்பும் தேவா

உம் வல்லமையால் என்னை இப்போ நிரப்பிடுமே

 

அக்கினியின் வல்லமை எனக்கு வேண்டுமே

சத்துருவின் கிரியைகளை சுட்டெரிக்கவே

அபிஷேகத்தின் வல்லமை இப்போ வேண்டுமே

எதிரியின் நுகங்களை முறித்தெறியவே  - ஊற்றும்

 

உன்னதத்தின் வல்லமை எனக்கு வேண்டுமே

உன்னதரை பற்றி சாட்சி எங்கும் பகரவே

எண்ணெய் அபிஷேகம் இப்போ எனக்கு வேண்டுமே

இருளின் ஜனங்கள் நடுவில் வெளிச்சம் வீசவே          - ஊற்றும்

 

வல்லமையின் பெருமழையை பொழியச்செய்யுமே

வல்லவரின் நாமத்திற்காய் என்றும் நிற்கவே

ராஜரீக அபிஷேகத்தை என்மேல் ஊற்றுமே

ராஜ்யத்தின் மேன்மைக்காய் என்றும் உழைக்கவே   - ஊற்றும்